News
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!!
தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக தற்கொலை என்ற பேச்சு காணப்படுகிறது. மேலும் பலரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களைப் பிரிந்து அவர்களது குடும்பம் சோகத்தில் வாடுகிறது. மேலும் பலரும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை போன்றவற்றால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தொடர்ச்சியாக தற்போது குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்போது தற்கொலை முயற்சி செய்ததாக காணப்படுகிறது.அதன்படி துரைச்சாமிபுரத்தில் குமார் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் மகள்கள் குருதர்ஷினி மற்றும் தேவதர்ஷினி உடன் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பூச்சி மருந்து குடித்த நிலையில் நான்கு பேர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரித்தபோது தெரியவந்துள்ளது அவர் கேரளாவில் தங்கியிருந்தபோது 10 லட்சம் ரூபாய்க்கு வீடு ஒன்றில் குமார் மற்றும் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் வீட்டை காலி செய்த பிறகும் வீட்டு உரிமையாளர் அந்த பத்து லட்சம் ரூபாயை தர மறுத்ததால் குமார் மற்றும் அவர்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
