வானொலி நிலையங்களை முடக்கும் முயற்சி மீண்டும் தொடக்கம்: அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!

என்னதான் தொலைக்காட்சி வந்தாலும் இன்றளவும் வானொலியின் மோகம் அனைவர் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சூழலில் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து வானொலி நிலையங்களில் தரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தரத்தைக் குறைக்க பிரசார் பாரதி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியானதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கலுடன் முடக்க முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களை சொந்த  நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து தரத்தைக் குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக தரம் குறைக்க தீர்மானித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். வானொலி நிலையங்களை முடக்கும் முயற்சி இல்லை என்று பிரசார் பாரதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் .ஒரு மாநிலத்துக்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்ற தீர்மானத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பன்முகத் தன்மையையும், உள்ளூர் பண்பாட்டு, மரபுகளையும் வெகுவாக தடுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 5 வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடக, நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment