பரபரப்பு..! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது யாகூப் (40). இவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கோத்தகிரி பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது கோத்தகிரி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தியும் கடந்த 2018ம் ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யும் காரணத்திற்காக இவருடைய கடை அகற்றப்பட்டது.
இதற்கு பதிலாக கோத்தகிரி காந்தி மைதானம் அருகே கடை வைத்துகொள்ள பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தெரிவித்துள்ளது.
தற்சமயம் இவர் கடைவைத்த இடத்தில் பேரூராட்சி வெளியூரை சேர்ந்தவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முகமது யாகூப் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக ஆட்டோவில் வந்துள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென
தான் வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
