தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் தாக்குதல் குறித்த வதந்தி – அதிரடி நடவடிக்கை !

சமீபத்தில் தமிழக முதல்வர் அவருக்கு பிறந்தாள் விழா சிறப்பாக நடை பெற்றது. நடைபெற்ற பிறந்தநாள் கூட்டத்தில் வட இந்தியத் தலைவர்களுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே உள்ள நல்லுறவைக் கண்டு சிலர் பொறாமைப்படுவதாகவும், அவர்களின் பொறாமையால் இந்தத் தாக்குதல் வதந்திகள் வந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் அவர்களின் பொறாமை காரணமாக வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சு கூறினார்.

ரஜினியாக மாறப்போகும் சிம்பு; அடுத்த பட பட்ஜெட் மட்டும் இவ்வளவு கோடியா?

இதற்கிடையில், பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த வதந்திகளை சரிபார்க்க தமிழக காவல்துறை சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.