
தமிழகம்
மயிலாடுதுறையில் பரபரப்பு…சமரசம் செய்ய வந்த போலீசாரை தாக்கிய விவசாயிகள்!!
பொதுவாக ஒரு பிரச்சனை என்றால் பலரும் நாடுவது போலீஸ் தான். போலீஸ் வந்துவிட்டால் அந்த பிரச்சனைக்கு முடிவு தெரிந்துவிடும் அல்லது பிரச்சினையை தீர்த்து விடுவார்கள் இந்த நிலையில் சமரசம் செய்ய வந்த போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த சம்பவம் மயிலாடுதுறை அருகே நடந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை அருகே நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.
கூலி வாங்குவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை நிலவி கொண்டு வந்தது. இந்த பிரச்சினை முக்கியமாக இன்றைய தினம் அங்கு கைகலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது போல் தெரிந்தது.
இதனால் மேலபருத்தி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேரடி நெல் விதைப்பு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமரசம் செய்ய வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிகழ்ந்தது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 50 விவசாய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
