Connect with us

சிகரெட் வாங்கியதற்கு காசு கேட்டதால் தாக்குதல்… வைரலாகும் சிசிடிவி காட்சி!!

cctv

தமிழகம்

சிகரெட் வாங்கியதற்கு காசு கேட்டதால் தாக்குதல்… வைரலாகும் சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே பிரபல தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இவரது கடையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு பேர் சிகரெட் வாங்கியதாக தெரிகிறது.

அப்போது சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற கடை உரிமையாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல் 10-நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருவதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top