பொங்கல் விடுமுறை நாட்கள்: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு-தெற்கு ரயில்வே!

தமிழகத்தில் பொங்கல் திருநாள் வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மற்றுமொரு இனிப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகைக்காக கூடுதலாக 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.

trai

அதன்படி பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு இருபத்திமூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை தொடங்கி மன்னார்குடி விரைவு ரயிலில் 16616 ஒரு தூங்கும் வசதி உள்ள பெட்டி ஒரு  இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ம் தேதியில் கோவை முதல் மன்னார்குடி விரைவு ரயிலில் 16616 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

chennai train

ஜனவரி 13-ஆம் தேதி மன்னார்குடியில் இருந்து கோவை வரும் 16615 ரயிலில் ஒரு தூங்கும் வசதி உள்ள பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஜனவரி 14-ம் தேதியில் மன்னார்குடி தொடங்கி கோவை வரும் 16615 ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி மட்டும் இணைக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஜனவரி 16 ஆம் தேதி வரை தினமும் திருவனந்தபுரம்-மதுரை 16343 ரயிலில் ஒரே ஒரு தூங்கும் வசதி உள்ள பெட்டி என்று கூறியுள்ளது. ஜனவரி 16ம் தேதி வரை தினமும் தஞ்சை தொடங்கி சென்னை எழும்பூர் ரயிலில் 16866 ரயிலில் ஒரே ஒரு தூங்கும் வசதி ரயில் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டுள்ளதா கூறியுள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை மட்டும் சென்னை எழும்பூர் தொடங்கி தஞ்சாவூர் விரைவில் 16865 ஒரு தூங்கும் வசதி உள்ள பெட்டி மட்டும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை தாம்பரம் தொடங்கி நாகர்கோவில் விரைவு ரயிலில் 22657 தூங்கும் வசதி ரயில் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை நாகர்கோவில் தாம்பரம் விரைவு ரயிலில் 22658 தூங்கும் வசதி ரயில் பெட்டி  மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு ரயிலில் 16127 இரண்டாம் வகுப்புப் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை குருவாயூர் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் 16128 ஒரு தூங்கும் வசதி ரயில் பெட்டி  மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் 15 வரை சென்னையை சேர்ந்த தொடங்கி திருவனந்தபுரம் விரைவு ரயிலில் 12625 ஒரு தூங்கும் வசதி உள்ள பெட்டி மட்டும் இணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் விரைவில் 12696 ஒரு தூங்கும் வசதி ரயில் பெட்டி மட்டும் இணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment