Connect with us

சென்னையில் நடந்த கொடூரம்….. வீட்டில் 15000 வலிநிவாரணி மாத்திரைகளா? விசாரணையில் வெளிவந்த உண்மை!

tablets

தமிழகம்

சென்னையில் நடந்த கொடூரம்….. வீட்டில் 15000 வலிநிவாரணி மாத்திரைகளா? விசாரணையில் வெளிவந்த உண்மை!

சென்னையில் நடந்த கொடூரம்….. வீட்டில் 15000 வலிநிவாரணி மாத்திரைகளா? விசாரணையில் வெளிவந்த உண்மை!

தற்போது போதை என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்த போதைப்பொருள்கள் தற்போது குழந்தைகள் கைகளிலும் நடமாடுவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது. இதில் பல பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாகி காணப்படுவது அவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாக்குகிறது.

இதனால் போதை பொருள் தடுப்பு முகாம்கள், மறுவாழ்வு மையம் உள்ளிட்டவைகள் ஏராளமாக ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பொதுவாக மெடிக்கல்களில் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வழங்க படமாட்டார்கள்.

ஏனென்றால் இதனை பயன்படுத்தி பலரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது என்பதால் அதனை வழங்க பெரும்பாலான பார்மசிகல் தயங்கும். இருப்பினும் ஆங்காங்கே போதைப் பொருட்களுக்கு வலிநிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தபட்டுதான் வருகிறது.

அந்த படி சென்னையில் சுமார் 15,000 வலிநிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15,000 வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்ட மாத்திரைகள் அனைத்தும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரியவந்தது. வீட்டில் மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த கொத்தவால்சாவடி சேர்ந்த பூங்குன்றன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top