ஏடிஎம் பணம் எடுப்பதற்கான கட்டணம் இன்று முதல் உயர்வு

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பணபரிவர்த்தனைகள் செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் என வாடிக்கையாளர் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது அந்த 20 ரூபாய் கட்டணம் சற்று உயர்ந்துள்ளது.அதன்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட பணபரிவர்த்தனைகள் செய்தால் 20 ரூபாய் கட்டணத்தில் இருந்து 21 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

இது வங்கியில் அடிக்கடி பணபரிவர்த்தனை செய்வோருக்கு சிறிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியின் ஏடிஎம் களில் இருந்து ஒரு மாதம் 5 முறை பரிவர்த்தனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம்  பிற வங்கி ஏடிஎம்கள் பயன்படுத்தினால் பெருநகரங்களில் 3 பரிவர்த்தனைகளும் சிறுநகரங்களில் 5 பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment