Connect with us

இன்று முதல் ஏடிஎம் கட்டணங்கள் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

News

இன்று முதல் ஏடிஎம் கட்டணங்கள் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

40bdc42e62239795d25860a6ff36912f

இன்று முதல் ஏடிஎம் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏடிஎம்களில் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த கட்டணம் இன்று முதல் 15 லிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாம் எடுப்பதற்கு கட்டணமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோல் ஏடிஎம் மட்டுமின்றி பணம் அல்லாத மற்ற பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இதுவரை ஐந்து ரூபாயாக இருந்த நிலையில் அந்த கட்டணம் இன்று முதல் 6 ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசதி வாய்ப்புள்ளவர்கள் மொத்தமாக பணம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய மக்கள் அவ்வப்போது தேவைக்கேற்ப பணம் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top