Connect with us

அரக்கோணம் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை-“4.5 லட்சம்” வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம்!!

News

அரக்கோணம் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை-“4.5 லட்சம்” வரை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம்!!

52bfbb5bef74776e6a2e4a662e043d7d

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. செயின் பறிப்பு, வழிப்பறி, வீடுகளில் கொள்ளை போன்றவை தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவை மிகுந்த வருத்தத்தை உருவாக்கி வருகிறது. மேலும் தற்போது ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் படித்த இளைஞர்கள் கூட இந்த போன்று செய்வதும் தெரியவந்துள்ளது.a3adea3901eeadb23f734f1d0235959f

இந்த நிலையில் தற்போது அரக்கோணம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அளிக்கப்பட்டதாக தகவல்.  அதன்படி அரக்கோணம் அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் உள்ள ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையர்கள் அடித்து உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதில் இருந்து 4.5 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த ஏடிஎம்மில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நிரப்பப்பட்டு ஏடிஎம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த  அருகே ஏடிஎம் சிசிடிவி இல்லாததால் கொள்ளையர்கள் துணிகரமாக இத்தனை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top