மீண்டும் இணையும் அட்லீ-விஜய் கூட்டணி! படத்தின் பட்ஜெட் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

விஜய் தற்போழுது வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்க போவது உறுதியாகியுள்ளது.

thalapathy vijay atlee kumar to collab for the fourth time 001

அதை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குவார் என உறுதியாகியுள்ளது. தற்போழுது இயக்குனர் , பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ஷாரூக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

படப்பிடிப்பே முடியல அதற்குள் தனுஷின் கேப்டர் மில்லரின் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

சமீபத்தில் விஜய்யின் 68வது படத்தில் பிகிலின் அப்பா விஜய் ராயப்பனின் இளமை காலத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.இந்நிலையில் இந்த புதிய படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருப்பதாகவும் அதுவும் பட்ஜெட் ரூ. 300 கோடி என்கின்றனர்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment