Connect with us

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் ‘ஜவான்’ படம் .. ஓடிடியில் இத்தனை கோடிக்கு விற்பனையா?

maxresdefault 44

பொழுதுபோக்கு

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் ‘ஜவான்’ படம் .. ஓடிடியில் இத்தனை கோடிக்கு விற்பனையா?

ராஜா ராணி ,தெறி, மெர்சல் மற்றும் பிகில் அடுத்தடுத்து படங்களில் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, இந்த படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததில் முன்னணி முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.

தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் வெற்றி கொடியை நாட்ட தயாரான அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தில் அட்லியின் ராசியான நடிகை நயன்தாராவை ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகம் செய்த்துள்ளார்.

JAWAN Title Announcement Shah Rukh Khan Atlee Kumar 02 JUNE 2023

இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல பிரச்சனை வந்தது,அதன் பின் அட்லியின் கதையில் குழப்படி ஏற்பட பல மாற்றங்கள் நடந்தது.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

SRK and Atlee new movie jawan

இந்நிலையில் ஜவான் படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேஜிஎப் 2 – தனியார் சேனலிலா? தேதியுடன் வெளியான மாஸ் அறிவிப்பு?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top