Entertainment
அட்லியின் அடுத்த பட நாயகி குறித்த புதிய தகவல்

ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என மூன்று விஜய் படங்களை இயக்கிய அட்லீயின், அடுத்த படம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் அடுத்த படத்தின் நாயகி கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது
அட்லியின் அடுத்த படத்தில் அட்லியின் மனைவி பிரியா தான் நாயகி என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான போட்டோசூட்டும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ஒரு படம் உறுதியாகும் முன்பே, அந்த படத்தின் ஹீரோ யார் என்பது தெரியும் முன்பே, நாயகி உறுதி செய்யப்பட்டுள்ளது சினிமா துறையில் இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
