ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்; மத்திய அரசு தகவல்..!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனால் வருமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயன் அடைந்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை! ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு!!

இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நேற்று டெல்லியில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் இலவச அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் புத்தாண்டு பரிசாக அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

அதே சமயம் அன்ன யோஜனா திட்டத்திம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி வரையில் செலவினம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இத்தகைய முடிவால் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.