அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

வேதாந்தம், சித்தாந்தம்னு சிலர் பெரிய பெரிய ஆன்மிகம் எல்லாம் பேசுவாங்க. நமக்கு ஒண்ணுமே புரியாது. ஆனால் தமிழ்ல தான் பேசுவாங்க. ஒண்ணுமே புரியலயேன்னு பார்ப்போம். அதே மாதிரி தான் இந்த அத்வைதமும். ரொம்ப சிம்பிளா என்ன விளக்கம்னு பார்ப்போம்.

ஆதிசங்கரர் நிலைநாட்டிய சித்தாந்த கொள்கை. த்வைதம் என்றால் 2. இரண்டு கொள்கைகள் உண்டு என்பது துவைதம். இரண்டல்ல. ஒன்று தான் என்பது அத்வைதம்.

ஆன்மா வேறு. பரமாத்மா வேறு என்பது தான் அந்த இரண்டு. அதில் பிரமத்தின் சொரூபம் தான் நாம். அப்படி இருக்கும்போது எப்படி இன்னொரு பொருளாக நாம் ஆன்மாவைப் பார்க்க முடியும்?

Meditation
Meditation

இறைவனுக்கு உள்ளே தான் அதுவும் மறைந்து நிற்கிறது என்ற கொள்கையைத் தான் துவைத, அத்வைத கொள்கையாக விளக்குறாங்க. இதற்கு நிறைய சைவ சித்தாந்த நூல்களைப் படிக்க வேண்டும். எல்லாவற்றையுமே நாம் பிரமத்தின் சொரூபமாகவே காண வேண்டும்.

இப்படி கண்டு கொண்டு தொடர்ந்து இந்த நிலையில் நாம் இருந்தால் நமக்கு காம, குரோத, லோப, மதமாச்சரியங்கள் என்ற கெட்ட குணங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

இந்த உலகில் எல்லாமே ஒன்று தான். ஆனால் அதன் வடிவங்கள் தான் வேறு. கனவைப் போலவே வாழ்க்கையில் தோற்றத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன. ஒருவரே பல நேரங்களில் வேறு வேறு குணத்துடன் நடந்து கொள்கிறார்.

Athvaidam
Athvaidam

ஒரு மனிதர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறாரா என்றால் இல்லை. ஒரு நேரம் சாந்தமாகவும், ஒரு நேரம் கோபத்துடனும், ஒரு நேரம் கலகலவென்று சிரித்துப் பேசியபடியும் இருப்பார். அதுபோல ஒரு பிரம்மத்தில் இருந்து பல்வேறு விஷயங்களை நாம் பிரித்துக் காண்கிறோம். ஆனால் இவை அனைத்தும் ஒன்றே. இது தான் அந்தக் கொள்கை.

இப்படியே நாம் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கற்றுக் கொண்டால் உலகனைத்தும் நமக்கு ஒன்றாகவே காட்சியளிக்கும். தங்கம் ஒன்று தான். ஆனால் அதை வைத்து நமக்கு விதவிதமான பல ஆபரணங்கள் வருகின்றன.

Jewells
Jewells

பஞ்சு ஒன்று தான். அதிலிருந்து வேட்டி, சேலை, சட்டை, பாவாடை, பனியன் என வெவ்வேறு வடிவங்கள். மண் ஒன்று தான். அதிலிருந்து பானை, சட்டி, குவளைன்னு வெவ்வேறு வடிவங்கள். அப்படித் தான் பரமாத்மா ஒன்று தான். அதிலிருந்து வெவ்வேறு வடிவங்கள்.

இப்படி பலவாய் பிரிந்து இருக்கும் கடவுள் ஒன்றாக நின்று அருள்புரிகிறார். இதைத் தான் ஆதிசங்கரர் அத்வைதம் என்ற பிரிவில் விளக்குகிறார். இந்த நிலையை சிறந்த குருமார்களிடம் கற்ற கல்வியின் பயனாக தியான நிலையில் எட்டலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.