அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் காசுகள் போடலாம் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.

குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நலம். குசேலர் கதையினை படித்தலும் நலம் சேர்க்கும்.

அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும். படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவலாம். ஆதரவின்றி தவிக்கும் முதியோருக்கு உதவலாம். தங்கத்தை வாங்கி பெட்டிக்குள் பூட்டி வைப்பதால் அது வளர்ந்துடாது. இந்நாளில் தங்கத்தை தானம் செய்யனும். இன்னிக்கு தங்கம் விக்கும் விலையில் இது சாத்தியமில்லை. அதனால, முடிந்தளவுக்கு அரிசி, கோதுமை, மஞ்சள், அன்னம் என தானம் செய்வோம். மொத்தத்தில் மகிழ்வித்து மகிழ்வோம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews