கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50ஆக உயர்வு !! மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ?

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 என விற்பனையாகிறது.

வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 90 லாரிகளில் வரும் தக்காளி தற்போது 50 லாரிகள் ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ. 50 விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த விலை ஏற்றத்திற்கு சுங்க கட்டண உயர்வும் காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே பருவ மழை காரணத்தினால் மகசூல் குறைந்ததால் தக்காளின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனால் இல்லதரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும், கடந்த மாதத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 கீழ் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment