Connect with us

அடி தூள்..!!! மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இதற்கெல்லாம் தடை?

samayam tamil 1

தமிழகம்

அடி தூள்..!!! மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இதற்கெல்லாம் தடை?

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படம் மற்றும் போட்டோஷூட் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.

தென் மாவட்டங்களில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமாக இருப்பது மதுரை திருமலை நாயக்கர் மஹால். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பகுதியானது 90-கிட்ஸ் காலக்கட்டத்தில் குறும்படம் மற்றும் படப்பிடிப்பு நடத்துவது அதிகமாக இருந்து வந்தது.

குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் திரைப்படம் எடுப்பதன் மூலம் தூண்கள் சேதம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்தவகையில் கடந்த 2011ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட போதிலும் சில நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி சிலர் குறும்படம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய செயலானது தொல்லியல்துறை கவனத்திற்கு சென்றது.

தற்போது மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படங்கள், விளம்பரங்கள் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோஷூட் நடத்த நிரந்தர தடை விதிப்பதாக தொல்லியல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top