சின்ன வயசில அப்பா சினிமால கவுண்டமணி அங்கிள் கிட்ட அடி வாங்குறத பார்க்கும் போது இப்படித்தான் தோணும்… செந்தில் மகன் மணிகண்ட பிரபு பகிர்வு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முனுசாமி ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை படித்த செந்தில் தனது 12 ஆம் வயதில் அவரது தந்தை திட்டிய காரணத்தினால் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூருக்கு ஓடி வந்துவிட்டார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேலைகளை செய்து வந்த செந்தில் நாடகத்தில் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதன் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1979 ஆம் ஆண்டு ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

செந்தில் அவர்கள் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த நகைச்சுவைகள் மக்களால் ரசிக்கப்பட்டது. 80 களில் புகழின் உச்சத்தில் இருந்தனர் கவுண்டமணி- செந்தில் ஜோடி. கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் செந்திலும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் கோமாளியாக நடித்தாலும் நிஜத்தில் பேச்சுத் திறமையில் வல்லவர் செந்தில்.

14 வருடங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு சென்று தனது தாய், தந்தையை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார் செந்தில். அப்போது ஒட்டுமொத்த கிராமமும் அவரை வரவேற்றது. பெற்றோரை சந்தித்த பின்பு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது பல் மருத்துவராக பணிபுரியும் மணிகண்ட பிரபு தனது அப்பாவின் சினிமாவில் நடித்ததைப் பற்றி பகிர்ந்து உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் அப்பா பெரும்பாலும் கவுண்டமணி அங்கிளிடம் அடி வாங்குவது போல் தான் நடித்து இருப்பார். அதை சிறு வயதில் சினிமாவில் பார்க்கும் போது கவுண்டமணி அங்கிளை எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். பின்னர் வளர்ந்த பின்பு அவர்கள் இருவரும் நடிப்பதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டோம் என்று பகிர்ந்துள்ளார் செந்தில் மகன் மணிகண்ட பிரபு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...