சீரியல்களில் நடித்தபோதும் சரி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற போதும் சரி மிகவும் கெத்தாக வலம் வந்த நடிகர் அஷ்வின் ஒரே ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இப்போ காமெடி மெட்டீரியலா சுத்திக்கிட்டு இருக்காரு. பாவம்ங்க அந்த மனுஷன். ஒரே ஒரு ஸ்பீச் தான் டோட்டல் இமேஜ் க்ளோஸ் அந்த கதை தான் அஷ்வினோடது.
இவர் ஹீரோவா நடிச்சிருக்குற என்ன சொல்லப்போகிறாய் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் திமிராக பேசியிருந்தார் அஷ்வின். அப்போது அவரை டிரோல் செய்ய தொடங்கி நெட்டிசன்கள் தற்போது வரை நிறுத்தவே இல்லை. அவர் என்ன செய்தாலும் அதை ஒரு கன்டென்ட்டாக மாற்றி டிரோல் செய்து வருகிறார்கள்.
அப்படி தான் சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஷ்வினை வச்சு செஞ்சிட்டு இருக்காங்க நெட்டிசன்கள். அது ஒன்னும் இல்லைங்க ஓடாத படத்துக்கு சமீபத்துல சக்ஸஸ் மீட் நடத்துனது மட்டுமில்லாம ஒரு ஃபேன்ஸ் மீட்டும் தயார் செஞ்சிருந்தாங்க. இதுல அஷ்வின் மற்றும் என்ன சொல்ல போகிறாய் நாயகி தேஜூ ஆகிய இருவரும் பங்கேற்றிருந்தார்கள்.
இந்த ஃபேன்ஸ் மீட்ல அஷ்வின் அவரோட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதா நினைச்சு மாறு வேஷத்துல வந்து சமோசா கொடுத்தாரு. அப்புறம் எல்லாரும் அஷ்வின் எங்க அஷ்வின் எங்கனு தேடும்போது அப்படியே சர்ப்ரைஸா வேஷத்த கலைச்சிட்டு ஒரு என்ட்ரி கொடுத்திருப்பாரு. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
இப்போ இததான் நெட்டிசன்கள் பங்கமா கலாய்ச்சிட்டு இருக்காங்க. இதனால் தூங்குமூஞ்சி அஷ்வினுக்கு அப்பறம் இப்போ மறுபடியும் அஷ்வின் ஒரு டிரோல் மெட்டீரியலாகிட்டாரு. பாவம்யா அந்த மனுஷன் அவரு ஒரு ஹீரோ அவர போய் இப்படி காமெடி பீஸா மாத்திட்டீங்களே.