குருவின் அதிசார பெயர்ச்சியால் மாற்றம் ஏற்பட இருக்கும் ராசிகள்

 

குருபகவான் தற்போது மகரத்தில் இருக்கிறார். இதில் இருந்து அதிசாரமாக அவர் கும்பராசிக்கு இடம்பெயர்ந்து சில மாதங்கள் இருக்க போகிறார். இதனால் நிறைய மாற்றங்கள் நிகழ இருக்கிறது.சார்வரி வருடம் பங்குனி மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 12.42 மணிக்கு குரு பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி இந்த அதிசார குரு பெயர்ச்சி நிகழ்கிறது. 160 நாட்கள் கும்ப ராசியில் தங்கியிருக்கும் குரு பகவான் பிலவ வருடம் ஆவணி மாதம் 29ஆம் தேதி மகர ராசிக்கு திரும்புவார். செப்டம்பர் 16 ஆம் தேதி வரை குரு பகவான் கும்ப ராசியில் தங்கியிருப்பார்

இதனால் நிறைய ராசிகள் பலன் அடைய போகிறது. முக்கியமாக ரிஷப ராசி, சிம்மராசி போன்றவை நல்ல பலன் பெற இருக்கிறது என்றாலும். இந்த அதிசார குருப்பெயர்ச்சிக்கு ஏதாவது புகழ்பெற்ற குரு ஸ்தலங்களில் அனைத்து ராசியினருமே சென்று வழிபட்டு வாருங்கள்.

ஆலங்குடி, திட்டை,  பட்டமங்களம் , குரு கோவிந்தவாடி போன்ற குரு ஸ்தலங்களிலும் தெட்சிணாமூர்த்தி குடி கொண்டுள்ள ஸ்தலங்களிலும் சென்று நம் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். இதனால் ஜாதக ரீதியாக கோச்சார ரீதியாக உள்ள தடைகள் அகன்று வாழ்வில் ஒளி வீசும்.

From around the web