இன்று தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபடுங்கள்

பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி வழிபாடு
 

இன்று தேய்பிறை அஷ்டமி தினம் ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தினத்தன்றும் பைரவரை வணங்கினால் வாழ்வில் சகல நலமும் கிடைக்கும் என்பது உறுதி. பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று செவ்வரளி சாற்றி வழிபட்டால் சிறப்பு. எல்லா சிவன் கோவில்களிலும் ஷேத்திரபால பைரவர் இருப்பார். அனைத்து கோவில்களிலும் காவலாளியாக அவர்தான் இருக்கிறார். இரவு நேர பூஜையில் பைரவருக்கு பூஜை செய்துதான் கோவில் நடை சாற்றுவார்கள் ஏனென்றால் அவர்தான் கோவிலை காப்பவர்.

சனீஸ்வரனின் குருவான அவரை தொடர்ந்து வணங்கினால் ஏழரைசனி, அஷ்டம சனி ஜென்மச்சனி போன்றவற்றில் இருந்து விடுதலை தருவார். அதனால் பைரவரை வணங்கி வாழ்வில் நலம் பெறுங்கள்.

இன்றும் மதியத்துக்கு மேலும் நாளையும் அஷ்டமி திதி உள்ளது.

From around the web