திருமணத்தடை அகல கன்னிமார் பூஜை

திருமணத்தடை அகல கன்னிமார் பூஜை
 
பல பெண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால்

பல பெண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் கடும் சிரமம் ஏற்பட்டு திருமணமே நடக்காது. அவர்களும் உலகத்தில் உள்ள பரிகாரங்களை எல்லாம் செய்வார்கள் ஜோதிடர்கள் சொல்லும் கோவில்களுக்கு சென்று வருவார்கள். அப்படி இருந்தும் திருமணத்தடை என்பது தொடர்கதையாகவே இருக்கும்.

பல ஊர்களில் பல கோவில்களில் சப்தகன்னிமார்கள் இருப்பார்கள். இவர்களை வணங்கினாலே திருமணத்தடை அகலும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சப்தகன்னிமார்களுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். ஒரு பதினைந்து அல்லது 20 நிமிடங்கள் சப்தகன்னிமார்களை மனக்கண்ணில் கொண்டு வந்து அப்படியே தியானம் செய்ய வேண்டும்.

முன் ஜென்ம வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் சீக்கிரம் திருமண யோகம் கை கூட வேண்டும் என தொடர்ந்து சப்தகன்னிமார்களை நாடி பூஜை செய்து வழிபட்டு வந்தால் கண்டிப்பாக திருமணத்தடை அகலும் என்பது நம்பிக்கை. மனம் தளராமல் தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

From around the web