ஆன்மிக ரீதியாக முக வசீகரமாக இருக்க என்ன செய்ய வேண்டும்

 

இது அழகு கலை பகுதியில் எழுத வேண்டிய குறிப்பு என்று நினைத்து விடாதீர்கள். ஆன்மிக ரீதியாகவும் முகம் வசீகரமாக இருக்க வேண்டும். முக வசீகரம் என்பது ஸ்டைலாக அழகாக இருப்பது அல்ல. ஸ்டைல் ஆனவர்கள் அழகானவர்கள் மட்டும்தான் முகம் வசீகரமாக இருப்பார்கள் என்பது தவறு. ஒரு தேர்ந்த ஞானி கூட நெற்றி நிறைய விபூதி பட்டைகுங்குமத்துடன் அழகாக இருப்பார்.

முக வசீகரத்துக்கு ஆன்மிக ரீதியாக திருநீறு குங்குமம் அணிந்தாலே போதும். முகம் பார்ப்பதற்கு லட்சுமி கடாட்ஷம் ஆக இருக்கும் முக வசீகரம் கிடைக்கும். மேலு முக வசீகரம் கிடைக்க ஒரிஜினல் புனுகு நெற்றியில் அணிய வேண்டும்.

ஒரிஜினல் புனுகு விலை அதிகம். நாட்டுமருந்து கடைகளில் மெழுகு சேர்த்து விற்கப்படும் போலி புனுகு பயன்படுத்தக்கூடாது. புனுகு இறைவனுக்கு பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வாசமான பொருள். தினமும் குளித்து முடித்து ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு திருநீறு குங்குமத்தோடு லேசாக புனுகும் வைத்துக்கொண்டால் செல்லும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும் அனைத்தும் சுபமாகும்.

மேலும் எப்போதும் இயற்கை வாசனை திரவியங்களை நாம் உபயோகித்தால் மனதும் உடலும் மகிழ்ச்சியாக இருக்கும். மனம் உற்சாகமாக இருந்தாலே முகம் வசீகரமாக இருக்கும். 

From around the web