மகாபாக்ய, அமலா யோகம் ஒருவருக்கு இருந்தால் என்ன பயன் ஏற்படும்?

பண்டைய காலங்களிலேயே ஜோதிடத்தை கூறும் நூல்கள் எழுதப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நூல்களில் கூறப்பட்டுள்ள யோகங்கள் பற்றி இன்று ஒவ்வொன்றாக பார்ப்போமா....

 

பண்டைய காலங்களிலேயே ஜோதிடத்தை கூறும் நூல்கள் எழுதப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நூல்களில் கூறப்பட்டுள்ள யோகங்கள் பற்றி இன்று ஒவ்வொன்றாக பார்ப்போமா....

முதலில் நாம் பார்க்க இருப்பது மகாபாக்ய யோகம். இந்த யோகம் யாருக்கு கிடைக்கும் என்றால் சூரியன், சந்திரன், லக்னம் இந்த மூன்றும் ஒரே ராசியில் இருந்து பகலில் பிறக்கும் ஆண்குழந்தைக்கும் அல்லது லக்னம், சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே ராசியில் இருந்து இரவில் பிறக்கும் பெண் குழந்தைக்கும் இந்த யோகம் கிட்டும்.

மேலும் ஒருவரிடத்தில் செல்வம் செழித்தோங்க இந்த யோகம் இருப்பது தான் காரணம். அடுத்தாக அமலா யோகம் பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு இந்த யோகம் எப்படி கிடைக்கும் என்றால் ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கோ அல்லது இலக்னத்திற்கோ பத்தாம் இடத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற இந்த மூன்று கிரகங்களும் அமைந்து இருந்தால் இந்த அமலா யோகம் கிடைக்கும்.

மேலும் இந்த யோகம் ஒருவருக்கும் செல்வம் மட்டுமில்லாது செல்வத்துடன் சேர்த்து புகழையும் சேர்த்து தரும்.

எனவே மேற்கண்ட இரண்டு யோகங்கள் ஒருவருக்கு இருந்தால் போதும் அவருடைய செல்வத்திற்கு எந்த குறையும் வராது. இது போன்று உள்ள பல யோகங்களால் ஒருவருக்கு நன்மை தான் ஏற்படும்.

From around the web