ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் நமக்கு என்ன பயன்....

நாம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்பது மிக மிக முக்கியம். இந்த வீட்டிற்கு பழங்காலத்திலேயே ஒரு பழமொழி கூட சொல்லி இருக்கிறார்கள். அந்த பழமொழி என்னவென்றால் கல்யாணம் செஞ்சு பாரு ஒரு வீடு கட்டிப் பாரு என்பார்கள். இது நூறு சதவிகிதம் உண்மை. 

சொந்த வீடு என்பது நமது ஒவ்வொருவரின் கனவு. சொந்தமாக ஒரு குடிசையில் கூட ராஜாவைப் போல் இருக்கலாம். ஆனால் பெரிய வாடகை  வீட்டில் இருக்க முடியாது.

ஏனெனில் மாதம் பிறந்தால் வாடகை. ஒவ்வொரு மாதமும் முடியும் போது மனம் திக்கு திக்கு என்றே இருக்கும். இந்த வாடகையை கூட சமாளித்து விடலாம். 

ஆனால் இந்த வாடகை வீட்டிற்கு சொந்தகாரர்களை சமாளிக்க முடியாது. ஏகப்பட்ட கண்டிஷன்கள், தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் என்று அனைத்தையும் காரணம் காட்டி வசூலிப்பார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்க வீட்டில் ஆணி அடிக்க கூடாது, அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது என்று ஏகப்பட்ட தொந்தரவுகள். இந்த பிரச்சினை எல்லாம் இல்லாமல் நாம் நிம்மதியாக வாழ நம் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டும் வலுவாக இருந்தால் போதும்.

நான் கூறுவது உண்மை தான் நம் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் நாம் சொந்த வீட்டுடன் சொகுசான வாழ்க்கையை வாழலாம். 

சொகுசு வாழ்க்கைக்கு அதிபதி சுக்கிரன். எனவே தான் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

From around the web