சஷ்டி திதி நாளில் என்னென்ன செய்தால் நமக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்....
 

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கலை. இது  நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் கூறுகிறது. ஜோதிடத்தில் உள்ள பலவகையான திதிகளில் இன்று சஷ்டி திதி பற்றி பார்ப்போம்.

 

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கலை. இது  நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தையும் கூறுகிறது. ஜோதிடத்தில் உள்ள பலவகையான திதிகளில் இன்று சஷ்டி திதி பற்றி பார்ப்போம்.

சஷ்டி என்றதும் நம்  நினைவுக்கு வருவது முருகப்பெருமான் தான். நான் என்ன கூற வருகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம், சஷ்டி திதியின் அதிபதி இந்த கதிர்வேலன் தான். சஷ்டி என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், அதற்கு ஆறு என்பது பொருள். அதாவது ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் என்பது பொருள். 

இந்த சஷ்டி திதி நாளில் இந்த கந்தனை வணங்குவதன் மூலம் நாம் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். மேலும் இந்நாளில் முருகனை விரதம் இருந்து வணங்கினால் நமக்கு சகல நன்மைகளும் தேடி வரும். 

மேலும் இந்நாளில் முருகன் கோவில் வாசலுக்கு சென்று அவருக்கு பூஜை செய்வதன் மூலம் நாம் நினைத்த பலன்களைப் பெறலாம். 

தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த சஷ்டி நாளில் காரத்திகேயனுக்கு விரதம் இருந்து வணங்கலாம். இந்த சஷ்டி நாளில் வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். மேலும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலையும் ஆரம்பிக்கலாம். 
 

From around the web