சொந்த வீடு அமைய வேண்டுமா

சொந்த வீடு வாங்குவதற்கு வழிபட வேண்டிய திருப்புகழ் பதிகம்
 
முருகன்

சொந்த வீடு பலருக்கும் மிகப்பெரிய கனவாகும். சொந்த வீடு வாங்குவதோ கட்டுவதோ தடைபட்டு நிற்பவர்கள் திருப்புகழில் உள்ள கீழ்க்கண்ட பாடலை தொடர்ந்து பாடி வர நன்மைகள் உண்டாகும்.

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே !

From around the web