விருச்சிகம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வைகாசி மாதம் விட்டு கொடுத்து சென்றால் சகல விதத்திலும் நன்மை ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் புதன் இணைந்து ஏழாம் வீட்டில் சாதகமாக இருப்பதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். போட்டி தேர்வுகள், நேர்முக தேர்வுகளில் முயற்சி செய்தால் வெற்றி காணலாம். அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல செய்தி வரக்கூடும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைந்து இருப்பதால்
 
Viruchigam vaigasi rasi palan 2018

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வைகாசி மாதம் விட்டு கொடுத்து சென்றால் சகல விதத்திலும் நன்மை ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் புதன் இணைந்து ஏழாம் வீட்டில் சாதகமாக இருப்பதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். போட்டி தேர்வுகள், நேர்முக தேர்வுகளில் முயற்சி செய்தால் வெற்றி காணலாம். அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல செய்தி வரக்கூடும்.

மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.  சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைந்து இருப்பதால் எதிர்பாராத விதத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரக்கூடும். சுக்கிரன் ஜூன் ஒன்பதாம் தேதிக்கு பிறகு ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தடைபட்டுக் கொண்டு இருந்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடிவடையும்.

செவ்வாய் கேது பகவான் இணைத்து உங்கள் ராசியில் இருந்து மூன்றாம் வீட்டில் இருப்பதால் விடாமுயற்சியுடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்ல விதத்தில் முடிவடையும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வேலை செய்ய வேண்டி வரக்கூடும். உங்களுக்கு வேலை சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று லாபம் குறையக்கூடும். ஏழரை சனி தொடர்வதால் எதிலும் நிதானமும், சகிப்புத்தன்மையுடனும் செயல்படக் கூடிய மாதமாக இருக்கிறது.

From around the web