விருச்சிகம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018!

விருச்சிகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் சுப செலவுகள் ஏற்படக்கூடும். சமயோசித புத்தியால் நன்மைகள் கிடைக்கும். பொதுவாக விருச்சிகம் ராசியினர் மற்றவர்களை திருத்துவதில் அதிக எண்ணம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் எண்ணம் சற்று குறைவாக இருக்கும். சனி பகவான் உங்கள் இரண்டாம் வீட்டில் இருப்பதால் 2/3/2018 பிறகு உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்குவார். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, மனக்கசப்பான நிகழ்வுகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
 
விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் சுப செலவுகள் ஏற்படக்கூடும். சமயோசித  புத்தியால் நன்மைகள் கிடைக்கும். பொதுவாக விருச்சிகம்  ராசியினர் மற்றவர்களை  திருத்துவதில் அதிக எண்ணம் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பணம்  சம்பாதிக்கும் எண்ணம்  சற்று குறைவாக இருக்கும். சனி பகவான் உங்கள் இரண்டாம் வீட்டில் இருப்பதால் 2/3/2018 பிறகு உங்களுக்கு சாதகமான பலன்களை  வழங்குவார்.

குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, மனக்கசப்பான நிகழ்வுகள்  யாவும் விலகும். கணவன் மனைவியிடையே கருத்து  வேறுபாடு  மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு வாழ்க்கை  துணையால் வருமானம் வரக்கூடும். புதிய மனை, புது வீடு வாங்குவது, புதிய வாகனம் மற்றும் தொழில் மாற்றங்கள் யாவும் நிகழும்.

குரு பகவான் 27/10/2018க்குள் ஏதேனும் சுப நிகழ்ச்சி நிகழ்த்தி விடுவார். வீட்டில் திருமணம், கிரகப்பிரவேசம், புதிதாக மனை, வீடு, குழந்தை பாக்கியம் எல்லாம் நடைபெறும். குரு பன்னிரண்டாம்  வீட்டில் இருப்பதால் சுப செலவுகளை கொடுப்பார். குரு பகவான் சுபவிரயம் செய்வதற்க்கு போதிய பணவரவு, வாய்ப்புகளைக் கொடுப்பார். முன்கோபத்தை தவிர்த்து விட்டு, பொறுமையுடன் செயல்படுங்கள். படபடவென்று இருக்காதீர்கள், தீர யோசித்த பிறகு செயலில் ஈடுபடுங்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன் தீர யோசித்த பிறகு செயல்படுங்கள்.  பெரிய முதலீடுகள் தவிர்க்கப் பாருங்கள். சுக்ரன் சாதகமான வீட்டில் செல்வதால்  ரசனைக்கேற்ப ஆடைகள், அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம்  உண்டாகும். சக  ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மாணவர்கள்  சோம்பல், அலட்சியத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

From around the web