விருச்சிகம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

விருச்சிகக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் உங்கள் மதிப்பும், மரியாதையும் கூடும் மாதமாக இருக்கப் போகிறது. நீங்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் சமயோஜித புத்தியால் பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். உங்கள் உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். வாங்கிய கடனை அடைக்கும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும். விருச்சிகம் ராசியினர் இந்த மாதத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குரு
 
Viruchigam april month rasi palan 2018

விருச்சிகக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் உங்கள் மதிப்பும், மரியாதையும் கூடும் மாதமாக இருக்கப் போகிறது. நீங்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் சமயோஜித புத்தியால் பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். உங்கள் உறவினர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். வாங்கிய கடனை அடைக்கும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும்.

விருச்சிகம் ராசியினர் இந்த மாதத்தில் வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் திடீர் பயணங்கள் மற்றும் செலவுகள் ஏற்படும். பணவரவு சீராக இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து கொண்டே இருக்கும்.

நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வருவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலை சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்பொழுது  வாக்குவாதம் வந்து போகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். கணவன் மனைவி இடையே ஈகோ, வீண் சந்தேகத்தை தவிர்த்திடுங்கள்.

உங்கள் ராசியிலிருந்து மூன்றாம் வீட்டில் ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய், கேதுவுடன் இணைவதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டாகும். இல்லத்தில் ஒற்றுமை ஏற்படும். நீங்கள் தன்னிச்சையாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ராகு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தையரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கேது பகவான் மூன்றாம் இடத்தில்  இருப்பதால் உங்களுக்கு சவால்கள், போட்டிகளை சமாளிக்கும் திறனைக் கொடுப்பார்.

ஏழரைச் சனி தொடர்வதால் எதிலும் நிதானமாக தீர யோசித்து செயல்படுங்கள்.

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

From around the web