துலாம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

துலாம் ராசிக்காரர்களே, இந்த வைகாசி மாதத்தில் புதிய வாய்ப்புகள் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. இந்த வைகாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு ராசிநாதன் சுக்கிரன் வலுவாக சாதகமான வீட்டில் இருப்பதால் தொட்டது துலங்கும் நேரமாக இருக்கப் போகின்றது. புதன் சாதகமான வீட்டில் சூரியனோடு இணைந்து இருப்பதால் பழைய பிரச்சனைகளில் ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு சிலர் பழையப் பொருட்களை விற்று புதிய ஆபரணங்கள் அல்லது பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உஷ்ணத்தால்
 
Thulam vaigasi rasi palan 2018

துலாம் ராசிக்காரர்களே, இந்த வைகாசி மாதத்தில் புதிய வாய்ப்புகள் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. இந்த வைகாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு ராசிநாதன் சுக்கிரன் வலுவாக சாதகமான வீட்டில் இருப்பதால் தொட்டது துலங்கும் நேரமாக இருக்கப் போகின்றது. புதன் சாதகமான வீட்டில் சூரியனோடு இணைந்து இருப்பதால் பழைய பிரச்சனைகளில் ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு சிலர் பழையப் பொருட்களை விற்று புதிய ஆபரணங்கள் அல்லது பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உஷ்ணத்தால் உடல் நல பாதிப்புகள் உண்டாகும். சனி பகவான் மூன்றாம் வீட்டில் தொடர்வதால் எதிலும் துணிச்சலுடன் செய்து வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் கேதுவுடன் நான்காம் வீட்டில் இருப்பதால் நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கும். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். விட்டுப் போன சொந்த பந்தங்கள் ஒன்று சேர்வார்கள். அவ்வப்பொழுது களைப்பு, சோர்வு வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

வியாபாரம் சீராக நடைபெறும். தொழில் விரிவுபடுத்துவது, புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை இந்த வைகாசி மாதத்தில் செய்யலாம். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். உங்கள் திறமை பளிச்சிடும்.

From around the web