துலாம் ராசி மே மாதம் ராசி பலன்கள் 2018!

துலாம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் தொட்டது எல்லாம் பொன்னாகும். தற்பொழுது குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பது சிறப்பான அமைப்பு இல்லாவிட்டாலும் சனி பகவானால் அதிக அளவில் நன்மைகள் நடைபெற போகின்றது. சனி பகவானால் பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இந்த மே மாதத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். புதன் பகவான் மே 4-ம் தேதி வரை சாதகமான நிலையில் இருக்கின்றார். ராகு பகவான் பத்தாம் இடத்தில்
 
Thulam may month rasi palan 2018

துலாம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் தொட்டது எல்லாம் பொன்னாகும். தற்பொழுது குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பது சிறப்பான அமைப்பு இல்லாவிட்டாலும் சனி பகவானால் அதிக அளவில் நன்மைகள் நடைபெற போகின்றது. சனி பகவானால் பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில்  மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இந்த மே மாதத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். புதன் பகவான் மே 4-ம் தேதி வரை சாதகமான நிலையில் இருக்கின்றார்.

ராகு பகவான் பத்தாம் இடத்தில்  இருப்பதால் டென்ஷன், அலைச்சல், வேலைச்சுமை, பொருள்கள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேது பகவான் மகரத்தில் நான்காம் இடத்தில்  இருப்பதால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைவதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரத்தில் எதிரிகள் தொல்லை தலைத்தூக்கும். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் போதிய லாபம் கிட்டும். மே 3-ம் தேதிக்கு பிறகு உறவினர்கள் வருகையில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இல்லத்தில் குழப்பான சூழல் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்துச் செல்லுங்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் எடுத்து எரிந்து பேசுவார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் நிதானமாக செயல்படுங்கள்.

மொத்தத்தில் துலாம் ராசியினருக்கு மே மாதம் முழுவதும் சனி பகவானால் எதிர்பாராத வருமானம் வரக்கூடும்.

From around the web