துலாம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018!

துலாம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் வேதனை முடிந்து நிம்மதி கிடைக்கும். பெரியவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் குணம் படைத்த துலாம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. மார்ச் ஏழாம் தேதி செவ்வாய் மூன்றாம் இடத்தில், சனி பகவான் மூன்றாம் இடத்தில், சூரியன் கும்பத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களிருக்கும் சிக்கல்கள் யாவும் விலகும். ஐந்தாம் இடத்தில்
 
துலாம்

துலாம்  ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் வேதனை முடிந்து நிம்மதி கிடைக்கும். பெரியவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் குணம் படைத்த துலாம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் சிறப்பான  பலன்கள் கிடைக்கப்போகிறது. மார்ச் ஏழாம்  தேதி செவ்வாய் மூன்றாம் இடத்தில், சனி பகவான் மூன்றாம் இடத்தில், சூரியன் கும்பத்தில் ஐந்தாம் இடத்தில்  இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி ஆறாம் இடத்தில் சூரியன்  சஞ்சாரம் செய்யும் பொழுது உங்களிருக்கும் சிக்கல்கள் யாவும் விலகும்.

ஐந்தாம்  இடத்தில்  சூரியன் இருப்பதால் பிள்ளைகள் சற்று பிடிவாதமாக இருப்பார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம்  உண்டாகும். கர்ப்பிணி  பெண்கள்  மருத்துவர் ஆலோசனையின்றி எந்த வித மருந்துகளை  எடுத்து கொள்ளாதீர்கள். கடன்கள் படி படியாக குறைய தொடங்கும். விரைவாக அடைக்கும் அளவிற்கு நல்ல வருமானம் வரக்கூடும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். சொந்த பந்தங்களின் வீடு விசேஷங்களுக்கு சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில்  சுபிட்சமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

பணம் பல வழிகளில் வரக்கூடும் என்பதால் வங்கிக் கணக்கில் சேமிப்பு உயரும். ஒரு சிலருக்கு வீடு வாங்குவது, புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் போவது  எல்லாம் நடைபெறும். குரு உங்கள் ராசியின் மீது அமர்ந்து குரு பார்வையாக 5,7,9வது இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு, வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள்,  வியாபாரம், தொழில் பிரச்சனைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பத்தாம்  இடத்தில்  இருக்கும் ராகு உங்களுக்கு பல வித வாய்ப்புகள் கொடுப்பார். சகோதரர், சகோதரி உங்களை புரிந்து கொண்டு பாசமாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் உங்களை உயர்த்துவார். புதிய  முயற்சி, முதலீடுகள் எல்லாம் நன்மை தரும் விதமாக அமையும். இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில்  எவ்வித பிரச்சனைகளின்றி சாதகமான பலன்கள்  உண்டாகும். ஒரு சிலருக்கு வேலை சுமை அதிகரிக்க கூடும். வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக வேலை செய்யும் சூழல்  ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும்  வாய்ப்பு வரக்கூடும். துலாம் ராசி மாணவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

From around the web