துலாம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் நீண்ட கால கனவுகள் நனவாகும் மாதமாக இருக்கப் போகிறது. இதுவரை எடுக்கும் காரியங்களில் தடைகள், தாமதம் இருந்து கொண்டே இருந்த வந்த நிலை மாறும். அடுத்தடுத்து உங்களுக்கு நல்லவை நடைபெறும் மாதமாக இருக்க போகிறது. இதுவரை இனம் புரியாத பயம் இருந்திருக்கும். இப்பொழுது அது நீங்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். இந்த ஏப்ரல் மாதத்தில் 14-ம் தேதி புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டு இருந்த சுப விசேஷங்கள்
 
Thulam april month rasi palan 2018

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் நீண்ட கால கனவுகள் நனவாகும் மாதமாக இருக்கப் போகிறது. இதுவரை எடுக்கும் காரியங்களில் தடைகள், தாமதம் இருந்து கொண்டே இருந்த வந்த நிலை மாறும். அடுத்தடுத்து உங்களுக்கு நல்லவை நடைபெறும் மாதமாக இருக்க போகிறது. இதுவரை இனம் புரியாத பயம் இருந்திருக்கும். இப்பொழுது அது நீங்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். இந்த ஏப்ரல் மாதத்தில் 14-ம் தேதி புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டு இருந்த சுப விசேஷங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.

உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளைக் கொடுத்தாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். பழைய பிரச்சனைகள் தலை தூக்கும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டில் ராகு பகவான் இருப்பதால் வேலை சுமை அதிகரிக்கும். வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படக்கூடும். நான்காம் வீட்டில் கேது பகவான் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய் கேது பகவானுடன் இணைவதால் உங்களுக்கு தெளிவு உண்டாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக பிரச்சனைகள் வந்து செல்லும்.

சனி பகவான் மூன்றாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு முன்னேற்றத்தை தருவார்.

அலுவலகத்தில் வேலை சுமை அதிகரித்தாலும் உங்கள் திறமை பளிச்சிடும்.

வியபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு சீரான லாபம் கிடைக்கும். ஆவணி மாதத்திற்கு பிறகு செய்கின்ற தொழிலில், வியாபாரத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

From around the web