சந்திரதோஷம் போக்கும் திங்களூர்

சந்திரதோஷம் போக்கும் திங்களூர்
 
சந்திரதோஷம் போக்கும் திங்களூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது. திங்களூர் இந்த ஊர் மிகச்சிறிய கிராமம்தான். இந்த ஊரில் உள்ளது கைலாசநாதர் கோவில். இந்த கோவிலில் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கோவில் ஜாதக ரீதியாக சந்திரனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பரிகாரத்தலமாக கருதப்படுகிறது.

ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு.

சந்திரன் தன் கலைகள் மங்கியதால் இந்த தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் ஒளி பெற்றான் என்பது வரலாறு.

ஜாதகரீதியாக சந்திரனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்த கோவில் செல்லலாம். சந்திரதசை நடப்பவர்கள் இந்த கோவில் செல்லலாம் வானில் இருக்கும் நிலவை பார்த்தாலே மனதுக்கு குளிர்ச்சி தந்து விடும் அது போல மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் இந்த கோவில் சென்று வரும்போது சந்திரன் நமக்கு அருள்வான்.

திங்கட்கிழமை செல்வது சிறப்பு. அதற்காக திங்கட்கிழமைதான் இந்த கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறு வேலையாக நீண்ட தூரத்தில் இருந்து அந்த பக்கம் செல்பவர்கள் கூட என்றாவது திங்கட்கிழமை வருவோம் என்று நினைக்காமல் அது சனிக்கிழமையாக இருந்தாலும் அந்த கோவில் சென்று வரலாம் தவறில்லை.

From around the web