ஜோதிடத்தில் ஒரு சிலருக்கு ஜாதகம், பலனை தராமல் போகக் காரணம் என்ன?

நம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து தான்  நமக்கு ஜோதிடம் கணித்து கூறப்படுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும். இப்படி கூறப்படும் ஜோதிடம் ஒரு சிலருக்கு பலிக்கும்.

 

நம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து தான்  நமக்கு ஜோதிடம் கணித்து கூறப்படுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும். இப்படி கூறப்படும் ஜோதிடம் ஒரு சிலருக்கு பலிக்கும்.

ஒரு சிலருக்கு பலிக்காது என்று கூறப்படுவதை கேள்விப் பட்டிருப்போம். இதை வைத்து நம்மில் ஒரு சிலர் ஜோதிடமே பொய்யானவை என்று கூட நினைத்து கொண்டிருப்போம்.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு கூறப்படும் ஜோதிடம் பலிக்காமல் போவதற்கு காரணம் ஜோதிடம் கூறப்படும் போது இருந்த நமது ராசியின் கிரக நிலைகள் இயற்கை மாற்றங்களால் கிரக நிலைகளில் மாறுதல் ஏற்பட்டு சிலருக்கு ஜோதிடத்தில் கூறுவது பலிக்காமல் போகிறது. நமது ஜாதகம் எப்படி அமைந்திருந்தால் பலன் கிடைக்காது என்று பார்ப்போமா...

நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படக்கூடிய கிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால் ஜாதக பலன் பலிக்காது என்று கூறுகின்றனர். மேலும் 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஜாதகம் பலன் இல்லை.

மேலும் ஒருவருடைய அனைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி அமைந்திருந்தாலும் அவர்களுக்கு ஜாதகம் பலனைக் கொடுக்காது என்று கூறுகின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

நவக்கிரகங்களில் ராகுவுடன் மூன்று கிரகங்களும் மற்றும் கேதுவுடன்  நான்கு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு ஜாதகம் பலனை தராது.

From around the web