மன அடக்கத்திற்கும் தவறான நினைப்பையும்  கட்டுப்படுத்தும் மந்திரம்

காமரீதியான பிரச்சினைகளையும் தவறான நினைப்புகளையும் கட்டுப்படுத்தி நல் வழியில் பக்தி மார்க்கத்திற்கு அழைத்து வரும் மந்திரம்
 
பரமேஸ்வரி

நம்மில் பலர் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை எல்லோருக்கும் உள்ள வயது கோளாறு காரணமாக காமரீதியான சிந்தனைகள் எழுந்து தவறான பழக்க வழக்கத்திற்கு உட்பட நேர்கிறது. எந்த நேரமும் சிலருக்கு தவறான காமரீதியான சிந்தனைகள் அவர்களை வாட்டி வதக்குகிறது அதிலிருந்து அவர்கள் விடுபட நினைத்தாலும் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் தவறான சிந்தனைகள் வந்து விட்டால் அதிலிருந்து எளிதாக விடுபட்டு பக்தி மார்க்கமாக வர முடிவதில்லை இப்படி இருப்போர்,

மன அடக்கம்,இந்திரிய அடக்கம் பெற பின் வரும் மந்திரத்தினை தினமும் ஒரு மணி நேரம் வரை ஜபிக்கவும்;

அம்மன் சன்னதியில் ஜபிப்பது நன்று;இரவுப் பொழுதில் ஜபிப்பது அவசியம்;

மது,அசைவம்,இரண்டையும் நிரந்தரமாக கைவிட்டு விட்டு ஜபிப்பது நன்று;

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஜபிப்பது நன்று;

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா 

இந்த மந்திரத்தை மேற்குறிப்பிட்டபடி ஜெபித்து வரவும்.

From around the web