சுக்கிரதோஷம் குறித்த முக்கிய விளக்கம்

சுக்கிரன் தோஷம் பற்றிய குறிப்புகள்
 

சுக்கிரன் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அஸ்தங்க தோஷம் அடைந்திருந்தாலும், மற்ற கிரகங்களுடன் கிரக யுத்தத்தில் இருந்தாலும் பாவக்கிரகங்களுடன் சேர்ந்து தீய ஸ்தானங்களில் இருந்தாலும் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டு விடும் இதனால் ஏற்படும் பாதிப்புகள்.

திருமண வாழ்க்கை, வாகன விபத்துக்கள், வீடு அமைவதில் தடை, பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண் நோய், வீரியமின்மை போன்ற விசயங்கள் ஏற்படும்.

இதற்கு சாந்தி பரிகாரமாக தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் சென்று வழிபட வேண்டும் . இது தஞ்சையை சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுக்குரிய ஸ்தலமாகும். நவக்கிரக ஸ்தலங்களில் எல்லாமே நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு மட்டும் இங்குள்ள அக்னீஸ்வரரே சுக்கிரனாக காட்சியளிக்கிறார்.

அக்னீஸ்வரரை பராசரர், கம்சன், சந்திரன் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள்.

From around the web