நாடி ஜோதிடம் பற்றிய சில உண்மை விளக்கங்கள்.....

நாம் சில நாட்களாகவே நாடி ஜோதிடம் பற்றி தான் பார்த்து கொண்டு வருகிறோம். ஆனால் இந்த முறை ஜோதிடத்தை நம்பலாமா, இல்லை வேண்டாமா என்று பலரிடம் பல சந்தேகங்கள் நிறைந்திருக்கும். இது பற்றிய சில விளக்கங்களை இன்று பார்ப்போமா....

 

நாம் சில நாட்களாகவே நாடி ஜோதிடம் பற்றி தான் பார்த்து கொண்டு வருகிறோம். ஆனால் இந்த முறை ஜோதிடத்தை நம்பலாமா, இல்லை வேண்டாமா என்று பலரிடம் பல சந்தேகங்கள் நிறைந்திருக்கும். இது பற்றிய சில விளக்கங்களை இன்று பார்ப்போமா....

நாடி ஜோதிடம் ஓலைச்சுவடிகளை வைத்துதான் பார்க்கப்படுகிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அனைவரிடம் எழும் ஒரு கேள்வி என்னவெனில் பல ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் எழுத்துக்கள் இப்பொழுது இருந்தது போல் இல்லை. அதாவது ஏதோ கிறுக்கி வைத்தது போலத்தான் இருக்கும்.

ஓலைச்சுவடியிலும் இப்படி கிரிக்கியது போன்ற புரியாத எழுத்துக்கள் தான் இருக்கும். அப்படி இருக்க இதை வைத்து எப்படி ஜோதிடம் கூறுகிறார்கள். அதாவது ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காகவே பண்டைய கால எழுத்து முறை கல்வியை கற்றுக் கொள்வர்.

இப்படி கற்றுக்கொண்ட கல்வியைப் பயன்படுத்தி ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பதை அதாவது அதில் எழுதப்பட்டிருக்கும் அந்தாதி பாடல்களை படித்து அதற்கு விளக்கம் கூறுவது போன்று இதற்கு முன் ஜோதிடர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று கூறிய பதிலைப் பொறுத்து இவ்வகையான ஜோதிட முறை கூறப்படுகிறது என்று பலரும் இந்நாடி ஜோதிடத்தின் மீது குற்றம் கூறுகின்றனர்.

மேலும் நாம் வைக்கும் ஒரு ரேகையை வைத்து நம்முடைய வாழ்க்கை நடைமுறைகளை கூற முடியுமா என்பது பலரின் கேள்விகளாக உள்ளது. இருப்பினும் இவ்வகையான ஜோதிடம் ஒரு சில நபர்களால் நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web