காலையில் உள்ளங்கையில் கண்விழித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காலையில் எழுந்த உடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம் குறித்து
 
lakshmi
காலையில் எழுந்திருக்கும்போதே, பரபரபரப்பான  வாழ்க்கைதான் பலருக்கும் உள்ளது! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் இருப்பது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம் ஆகும். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

எனவே காலையில் எழுந்த உடன் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில்  குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!

From around the web