சிம்மம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

சிம்மம் ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் ஆடம்பர வசதிகள் பெருகும் மாதமாக அமைகிறது. சுக்ரன் மற்றும் புதன் இணைந்து சிம்மம் ராசியினருக்கு நன்மைகள் அதிகளவில் தர போகிறார்கள் . கேது பகவான் ஆறாம் வீட்டில் மகர ராசியில் இருப்பதால் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும், துணிச்சல் பெருகும், பகைவர்கள் உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதன் எட்டாம் இடத்தில் மீனம் ராசியிலிருந்து உங்களை மேலும்
 
Simmam panguni rasi palan 2018

சிம்மம் ராசியினருக்கு இந்த பங்குனி  மாதம்  ஆடம்பர  வசதிகள்  பெருகும் மாதமாக  அமைகிறது. சுக்ரன் மற்றும் புதன்  இணைந்து சிம்மம் ராசியினருக்கு நன்மைகள்  அதிகளவில் தர போகிறார்கள் . கேது பகவான் ஆறாம் வீட்டில் மகர  ராசியில் இருப்பதால்  செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

இந்த மாதம்  பணவரவு அதிகரிக்கும், துணிச்சல்  பெருகும், பகைவர்கள் உங்களிடம் சரணடையும்  நிலை உருவாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள். புதன்  எட்டாம்  இடத்தில்  மீனம் ராசியிலிருந்து உங்களை மேலும் மேம்படுத்துவார். சுக்கிரன் சாதகமான  வீட்டில் இருப்பதால் சிம்மம் ராசியினருக்கு ஆடம்பர வசதிகள் ஏற்படும்.

இதுவரை வீட்டில் மங்கள  ஓசை  கேட்கவில்லை என்று இருந்தவர்களுக்கு வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் அனுகூலமான  சூழ்நிலை  ஏற்படும். குடும்பத்தில் அனைவரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.

மார்ச் 26 முதல் ஏப்ரல்  1 -ம் தேதி வரை சந்திரனால்  தடைகள், மனக்கசப்பான  சம்பவங்கள்  வரக்கூடும். ஏப்ரல் 9,10 தேதிக்கு பிறகு நல்ல பணவரவு இருக்கும். பணியிடத்தில்  உங்கள் வேலை பளிச்சிடும். சக  ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின்  ஒத்துழைப்பும்  கிடைக்கும்.  அரசு ஊழியர்கள்  கவனமாக  இருக்க வேண்டும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள்  முடிவு பெறும்.  ஒரு சிலருக்கு தொழில்  ரீதியான  பயணங்கள்  மேற்கொள்ள வேண்டி  வரக்கூடும்.

மார்ச் 24, 25-ம் தேதி உறவினர்கள்  வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை  உண்டாகும்.  ஏப்ரல்  4,5,6 ல்  உறவினர்களால்  மனக்கசப்பு  வரக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.

பெண்களுக்கு  குடும்பத்தில், அலுவலகத்தில்  நற்பெயர் உண்டாகும். ஏப்ரல் 9 –க்கு வீண்பகை, மனஉளைச்சல்  மறையும். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் காண்பார்கள். முயற்சிக்கேற்ப பலன்கள்  உண்டாகும். ஒரு சிலருக்கு மேலதிகாரிகளின்  பாராட்டு, பதவி  உயர்வு, சம்பள  உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு உபரி  வருமானம் வரக்கூடும்.

சிம்மம் ராசி வியாபாரிகள், தொழில்  பிரிவினர்  முன்னேற்ற பாதையில்  அடியெடுத்து  வைப்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும்.  ஒரு சிலர் அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். அவ்வாறு நேர்ந்தாலும்  அதற்கேற்ப லாபம் வரும்.  சிம்மம் ராசி விவசாயிகளுக்கு கிழங்கு, காய்கறி, பழவகை  பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

சிம்மம் ராசி மாணவர்கள்  படிப்பில்  அதிகம்  நாட்டம்  ஏற்பட்டு முன்னேற்றம்  காண்பார்கள். போட்டி, பந்தயங்களில்  வெற்றி காண்பார்கள். தேர்வில் கூடுதல் மதிப்பெண்  பெற்று பெற்றோரை ஆச்சரியப்படுத்துவார்கள்.

பரிகாரம் :

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு  நெய் தீபம் ஏற்றி  வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் மற்றும் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும்.

உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும் என்பதால் செவ்வாய்க் கிழமை  முருகனை வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்தால் மனசோர்வாக  இருப்பவர்கள் கூட புதிய உற்சாகம் பெறுவீர்கள்.

From around the web