சிம்மம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018!

நிர்வாகத்தில் திறமையாக, சிறப்பாக செயல் புரியும் சிம்மம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் லாபம் பெருகும். சிம்மம் ராசியினருக்கு ராகுவும், குருவும் மாற்றங்களும் ஏற்றங்களும் கொடுப்பார்கள். இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் இடத்திலும் , கேது 6-ம் இடத்தில் இருப்பதால் பல வித மாற்றங்கள் நிகழும். சிம்மம் ராசியினருக்கு 2/3/2018 பிறகு பல வித பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை, பணம் பிரச்சனைகள், தொழிலாளர்களின் பிரச்சனை போன்றவை எல்லாம் நல்ல படியாக முடிவடையும். இந்த ராகு
 
சிம்மம்

நிர்வாகத்தில் திறமையாக, சிறப்பாக செயல் புரியும் சிம்மம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் லாபம் பெருகும். சிம்மம் ராசியினருக்கு ராகுவும், குருவும்  மாற்றங்களும் ஏற்றங்களும் கொடுப்பார்கள். இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் இடத்திலும் , கேது  6-ம் இடத்தில் இருப்பதால் பல வித மாற்றங்கள் நிகழும். சிம்மம் ராசியினருக்கு 2/3/2018 பிறகு பல வித பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை, பணம் பிரச்சனைகள், தொழிலாளர்களின் பிரச்சனை போன்றவை எல்லாம் நல்ல படியாக முடிவடையும். இந்த ராகு கேது உங்களுக்கு எல்லா விதத்திலும் மாறுதல் அளிக்க போகிறது. இந்த கிரகங்களுடன் குரு துணை இருப்பதால் உங்களுக்கு பல வித மாற்றங்கள் கொடுத்து முன்னேற்றத்தை அளிக்க போகிறது.

குரு பகவான் மூன்றாம்  இடத்தில்  அமர்ந்து தனது, ஐந்தாம்,ஏழாம் , ஒன்பதாம்  பார்வை  விழுவதால் உங்களுக்கு எல்லாம் விதத்திலும் மாற்றங்கள் நிகழும். பணப் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனைகள் யாவும் தீரும். இதுவரை தாமதமாகிக் கொண்டு இருந்த திருமணம் 18/4/2018 முதல் 27/10/2018க்குள் ஒரு முடிவுக்கு வரக் கூடும். உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் நல்ல துணை அமையும். ஒரு சிலருக்கு உடல் உஷ்ண பாதிப்புகள் உண்டாகும் என்பதால் குளுமையான உணவை எடுத்துத் கொள்ளுங்கள்.  மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில்  கவனமாக  இருக்க வேண்டும்.

பணவரவு சுமாராக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியிடம்  கருத்து  வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் விட்டு கொடுத்து, அனுசரித்துப்  போக வேண்டும்.

எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும், பணவரவு இருக்கும். குழந்தைகளால்  வீண் அலைச்சல், மனம் சஞ்சலம்  ஏற்படக்கூடும். மாணவர்கள் கவனம்  சிதறும் என்பதால்  பெற்றவர்கள் பிள்ளைகளின் போக்கைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், வியாபாரம், வேலை செய்யும் இடங்களில்  சக ஊழியர்களிடம் பகை ஏற்படக்கூடும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். தீர யோசித்த பிறகு கருத்தைத்  தெரிவிக்கலாம். மேலும் தடைகள், தாமதம் விலக முருகனை வழிபாடு செய்தால் நன்மைகள் ஏற்படும். வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி, குரு பகவானை தொடர்ந்து வழிபட்டு வர பல வித மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழும்.

From around the web