சிம்மம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள சிம்மம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் புகழ் கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. இதுவரை பல வித இன்னல்களை சந்தித்த சிம்ம ராசியினருக்கு இந்த ஜூன் மாதம் தொல்லைகள் அகலும் மாதமாக இருக்கப் போகின்றது. குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து உங்கள் ஏழாம், ஒன்பதாம், பதினோராம் வீட்டை பார்க்கின்றார். இல்லத்தில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். செவ்வாய் பகவான் ஆறாம் இடத்தில் கேது பகவானோடு இணைந்து இருப்பதால் சகோதர வகையால் நன்மைகள் ஏற்படக்கூடும்.
 
Simmam june month rasi palan 2018

அன்புள்ள சிம்மம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் புகழ் கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. இதுவரை பல வித இன்னல்களை சந்தித்த சிம்ம ராசியினருக்கு இந்த ஜூன் மாதம் தொல்லைகள் அகலும் மாதமாக இருக்கப் போகின்றது. குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து உங்கள் ஏழாம், ஒன்பதாம், பதினோராம் வீட்டை பார்க்கின்றார். இல்லத்தில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.

செவ்வாய் பகவான் ஆறாம் இடத்தில் கேது பகவானோடு இணைந்து இருப்பதால் சகோதர வகையால் நன்மைகள் ஏற்படக்கூடும். நீங்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் விதமாக பல நல்ல காரியங்களை முடித்து கொடுப்பார்கள். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் பாதியில்  நின்ற வேலைகள் எல்லாம் நல்லபடியாக முடிவடையும்.  திருமண முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலில் தனலாபம் உண்டாகும். வியாபாரம் சீராக நடைபெறும். ஒரு சிலருக்கு மனை வாங்குவது, வீடு கட்டுவது எல்லாம் நல்ல படியாக நடைபெறும்.

மாத தொடக்கத்தில் பதினோராம் இடத்தில்  இருக்கும் சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரக்கூடும். ஜூன் 9-ம் தேதிக்கு பிறகு சுக்கிரன் கடகத்தில் இருப்பதால் எதிலும் நிதானமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஜூன் 5-ம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது எதிர்பாராத அற்புதமான பலன்களைக் கொடுக்கும். உங்களுக்கு உதவி செய்ய பலர் வருவார்கள். மொத்தத்தில் இந்த ஜூன் மாதம் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் மாதமாக இருக்கப் போகின்றது.

From around the web