சிம்மம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

சிம்மம் ராசிக்காரர்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரக்கூடும். ஏப்ரல் மாத பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பண வரவு சீராக இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும். ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது பகவான் ஆறாம் வீட்டிலும் இருப்பதால் ஆன்மீக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. நீண்ட காலமாக நினைத்திருந்த கோயிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள்
 
Simmam april month rasi palan 2018

சிம்மம் ராசிக்காரர்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரக்கூடும். ஏப்ரல் மாத பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பண வரவு சீராக இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும். ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது பகவான் ஆறாம் வீட்டிலும் இருப்பதால் ஆன்மீக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. நீண்ட காலமாக நினைத்திருந்த கோயிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

குரு பகவான் மூன்றாம் வீட்டில் இருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்ய வேண்டி வரும். நிதானமாக செயல்படுங்கள். பேச்சில் கவனம் தேவை. சனி பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். சிம்ம ராசியினருக்கு திருமணத் தடை விலகி மனதிற்கு ஏற்ற படி நல்ல வரன் அமையும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுக்கு கொடுக்கின்ற காரியங்களை நேரத்திற்கு முடித்து விடுங்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிம்ம ராசியினருக்கு திறமை பளிச்சிடும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.

ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய் கேதுவுடன் இணைவதால் சிம்ம ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். செவ்வாய் ஆறாம் வீட்டில் வருவதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். சகோதரர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் சிம்மம் ராசியினருக்கு ஏப்ரல் மாத பிற்பகுதிதான்  நல்ல வளர்ச்சி தரும் விதமாக இருக்க போகின்றது.

From around the web