ஜாதகத்தில் நவகிரகங்களின் முக்கியத்துவம் என்ன?....
 
நாம் இறைவனை தரிசிக்க கோவிலுக்கு சென்றால் அங்கு நவகிரங்கள் என்று அழைக்கக்கூடிய ஒன்பது கிரகங்களை காணலாம். ஜோதிடர்களிடம் சென்று ஜோதிடம் பார்க்கும்போது நம் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றால் பெரும்பாலான ஜோதிடர்கள் நம்மிடம் சொல்வது நவகிரகங்களை தரிசியுங்கள் என்பது தான்.
 
நம் விண்வெளியில் உள்ள கோள்கள் எவ்வளவு இன்றிமையாதது. அதே போன்றுதான் நம் ஜாதகத்தில் கூறப்படுகின்ற கிரகங்களும்.  இந்த கிரகங்கள் சரியாக இருந்தால் தான் நாம் சரியாக வாழ முடியும். அப்படி இல்லையென்றால் நம் வாழ்க்கை அவ்வளவு தான். அதாவது ஏகப்பட்ட துன்பங்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். நம் ஜாதகத்தில் கிரகநிலைகள் என்பது மிக மிக முக்கியம். அந்த கிரக நிலைகளால் தான் நம்முடைய வாழ்க்கையே செயல்படுகிறது.

அந்த கிரகங்கள் சரியாக இருந்தால் தான் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்த நவக்கிரகங்களே இவ்வுலகில் நடக்கும் அனைத்திற்கும் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே தான் எந்த கோவிலுக்கு சென்றாலும் எல்லா தெய்வங்களை வழிபட்ட பின்னர் இந்த நவகிரகங்களை நாம் வணங்குவோம்.

அனைத்திற்கும் காரணமான இந்த நவகிரகங்களை வணங்கும் முறையும் புதிதாக தான் இருக்கின்றன. எனவே நாம் வாழ்க்கையில் முன்னேறவும், பிரச்சினைகள் நீங்கவும் நவகிரகங்களை தரிசிப்பது மிகவும் இன்றியமையாதது.

From around the web