கஷ்டத்தை நீக்கும் உப்பு பரிகாரம்....

ஜோதிட வல்லுநர்கள் நிறைய பரிகார வகைகளை கூறுவது வழக்கம். இதில் உப்பு பரிகாரம் என்பது என்ன என்பதை பற்றி பார்ப்போமா...

 

ஜோதிடத்தில் நம்முடைய கிரக நிலைகள் சரியில்லாத போது நமக்கு ஏதாவது விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முதலில் ஜோதிட வல்லுநர்களிடம் நாம் கேட்பது என்னவென்றால் இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்பது தான். இதற்கு ஜோதிட வல்லுநர்கள் நிறைய பரிகார வகைகளை கூறுவது வழக்கம். இதில் உப்பு பரிகாரம் என்பது என்ன என்பதை பற்றி பார்ப்போமா...

மேலும் உப்பை பயன்படுத்தி நம் வாழ்வின் கஷ்ட நஷ்ட நலன்களை எல்லாம் எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பதையும் பார்ப்போம். உப்பை மஹாலக்ஷ்மி என்று கூறுவர். மேலும் உப்பை ஒரு சிறந்த பரிகாரப் பொருள் என்றும் கூறுவர்.

எந்தெந்த வகையில் உப்பை பயன்படுத்தினால் நம் ஜாதக கிரக நிலைகளால் ஏற்படும் நம்முடைய கஷ்டத்தை நீக்க முடியும் என்று பார்ப்போம். முதலில் சிறிதளவு உப்பை சிறிதளவு நீரில் கலக்கி அதை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இது வீட்டில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் நீக்கும்.

அடுத்ததாக சிவப்பு துணியில் சிறிதளவு உப்பை சேர்த்து கட்டி அதை வீட்டின் நுழைவாயிலில் கட்டி தொங்க விட வேண்டும். இது வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றும்.

நாம் குளிக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் நம்மிடையே உள்ள கெட்ட சக்திகள் விலக கூடும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை. மேலும் உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

அதாவது பண வரவு தேடி வரும். நான் மேற்கூறியவாறு செய்தால் நாம் ஜாதக கிரக நிலைகளால் நமக்கு ஏற்பட்ட பணக் கஷ்டம் நீங்கி செல்வ கடாச்சம் உண்டாகும்.

From around the web