சகாதேவர் தொடுகுறி சாஸ்திரம் தெரியுமா

சகாதேவர் தொடுகுறி சாஸ்திரம் தெரியுமா
 
சகாதேவரின் இந்த தொடுகுறி சாஸ்திரம்

மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் சகாதேவர்தான் ஜோதிடக்கலையில் சி்றந்து விளங்கியவர் ஆவார். பல எண்ணற்ற ஜோதிட நூல்களை படைத்துள்ள இவரின் ஜோதிடங்கள் பல விதமாக தற்போதைய கால நடைமுறைக்கேற்ப சான்றோர்களால் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இவர் எழுதிய ஓலைச்சுவடி குறிப்புகள் எல்லாம் தற்போதைக்கு கிடைக்குமா என தெரியவில்லை. ஆனால் இவர் எழுதிய ஜோதிட நூல்கள் பல இப்போதும் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது ஆருடம் சொல்லும் தொடுகுறி சாஸ்திரம். கிராமங்களில் உள்ள ஜோதிடர்கள் தொடுகுறி சாஸ்திர புத்தகத்தை வைத்திருப்பார்கள் அதில் நிறைய பாடல்கள் இருக்கும் நாம் குளித்து முடித்து நல்ல பக்திபூர்வமாக சென்று அந்த புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பாடலை தொட்டால் அந்த பலன் சில நாட்களில் நடக்கும் என அறிந்து கொள்ளலாம்.

சகாதேவரின் இந்த தொடுகுறி சாஸ்திரம் தற்போது இணைய வடிவில் பல்வேறு வகையில் வந்து விட்டது. பிரபல பிரிட்டானியா நூலகம் சகாதேவர் தொடுகுறி சாஸ்திரத்துக்கென ஒரு கட்டம் கொடுத்துள்ளது. அந்த கட்டத்தில் இந்திரன் , குயவர் என பல பெயர்கள் இருக்கும். நம் கோரிக்கையை நினைத்து அந்த கட்டத்தில் ஒன்றை தொட்டால் ஒரு பாக்ஸ் ஒன்று ஓப்பன் ஆகி வரும் அதையும் திறந்தால் நமக்கான பலன் சித்தர் பாடல் வடிவில் வரும். அதன் லிங்க்; http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இது யூ டியூபிலும் வீடியோ வடிவிலும் வருகிறது. இந்த  லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web