ரிஷபம் ராசி மே மாதம் ராசி பலன்கள் 2018!

ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் வளர்ச்சி பெருகும் மாதமாக இருக்கப் போகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி புரிவீர்கள். ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதால் மனதில் தைரியம் பிறக்கும். ராகு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார். கேது பகவான் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்யுடன் தொடர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலர் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறும்.
 
Rishabam may month rasi palan 2018

ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் வளர்ச்சி பெருகும்  மாதமாக இருக்கப் போகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி புரிவீர்கள். ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதால் மனதில் தைரியம் பிறக்கும். ராகு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார். கேது பகவான் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்யுடன் தொடர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலர் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். இந்த மே மாதத்தில் லாபம் படிப்படியாக உயர தொடங்கும். மே மூன்றாம் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் பிரச்சனைகள் வரக்கூடும். எதிரிகளால் தொல்லைகள் வரக்கூடும். எதிலும் கவனம் தேவை. மே நான்காம் தேதிக்கு பிறகு ஒரு சிலருக்கு பணியிடமாற்றம், வெளியூர் பயணம் ஏற்படும்.  மே 9, 10, 11 தேதிகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் கை உயரும்.

சனி பகவான் அஷ்டமத்தில் இருப்பதால் யாரையும் நம்பி கடன் தருவது, பெரிய முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மொத்தத்தில் இந்த மே மாதம் உங்கள் கடின உழைப்பாலும், தொலைநோக்கு சிந்தனையாலும் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது.

From around the web